பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 கொய்த மலர்கள் பழைய கொள்கைதான். இன்று இது அரசியல் கட்சி களால் பற்றப்படுகிறது. இக் கொள்கை காட்டில் நிறைவேற்றப்பட வேண்டுமானால், மக்கள், கட்சி வேறு பாட்டையும், பிற சாதி சமய வேறுபாடுகளையும் மறக்க வேண்டும். நல்லது செய்வதில் நாட்டவர் அனைவரும் ஒன்றிச் செயலாற்றினால் வரும் தவறு ஒன்றும் இல்லையே! இந்த உண்மை உணர்ந்து உலகில் வாழும் மக்கள் பாரத நாட்டுப் பல்வகைப்பட்ட இன மக்கள்-சிறப்பாகத் தமிழ் மக்கள்-- வெறும் உதட்டளவில் இல்லாது உண்மையாக உள்ளத்தில் நினைத்து ஒன்றிச் செயலாற்ற. வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தம்மை மறந்து-தம்மைப் பிரிக்கும் சாதி, சமயம், கட்சி, பிற வேறுபாடுகளை மறந்து- தன்னை ஒரு மனிதன் என்று கருதி. அம்மனிதனுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகளை யெல்லாம் பெற்று, 'நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை' என்ற கொள்கையில் நாம் வாழ்வோமானால், நாடு நலம் பெற்று ஓங்கும். அத்தகைய செம்மையான வாழ்வுப் பாதையில்-சமதர்மச் சமுதாய வாழ்வுப் பாதை யில் - நாம் அனைவரும் உளம் ஒன்றி முன்னேறுவோமாக