பக்கம்:கொய்த மலர்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழி - ஆரியம் - சமஸ்கிருதம் 131 தமிழர்கள் பிரித்தே, வட வாரியர் எனவே வழங்கி வந்தார்கள் என்பதை இலக்கியங்கள் எடுத்துக் காட்டு கின்றன. இன்று இந்தியர் என்ற பெயரிலேயே இருநாடு. களில் - ஒன்றிற் கொன்று எவ்வகையிலும் தொடர்பில் லாத இருகாடுகளில் வாழ்பவரை உலகம் குறிப்பதைக் காண்கின்ருேம். எனினும் அமெரிக்கா நாட்டை ஒட்டி வாழ்பவர்களைச் செவ்விந்தியர் எனப் பிரித்திருப்பதை -யும் காண்கின்ருேம் இது போன்றே தமிழ் நாட்டு அரிய ராக வாழ்ந்த ஆரியரும் வடவாரியரும் பெயரளவில் ஒன்று பட்டாலும் பிற அனைத்தினும் வேறுபட்டவராவார்கள், அந்த வட வாரியர் மொழியை அவர்கள் வேண்டுமாயின் ஆரியம் எனக் கொள்ளலாம். எனினும் கான் மேலே காட்டியபடி அவர்களே தம் சமஸ்கிருதத்துக்கு ஆரிய மொழி என்று பெயரிட்டதாகக் காணமுடியவில்லை.எனவே தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வடமொழி, ஆரியம் என்பன இன்றைய சமஸ்கிருதத்'தினும் வேறுபட்டவை என்பதும், வட்மொழி தமிழ்நாட்டு எல்லையில் வடக்கே - பக்கத்திலேயே - வழங்கியதாக இருக்க வேண்டும் என்ப தும், ஆரியம் தமிழ் நாட்டிலேயே ஒழுக்க நெறியில் உயர்ந்த அரியர் வழங்கிய குழுக்குறி மொழியாகவோ அன்றி வேறு வகையாகவோ இருக்க வேண்டும் என்பதும், இம்மொழியையும் பின் வடக்கிலிருந்து வந்த சமஸ்கிருதத் தையும் 'ஆரிய மொழி' என்ற பெயரால் ஒற்றுமைப் படுத்தி இருக்கவேண்டும் என்பதும் விளங்குகின்றன. தமிழ் நாட்டில் அழகின் அடியாகப் பிறந்த முருகு என்னும் முருகனையும் புராணக் கடவுளாகிய கந்தனையும் ஒருவராக்கி வழிபடும் வரலாறு நாடறிந்ததே. இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு ஆராய்ந்து வரலாறு, மொழி, கலை ஆகியவைபற்றி ஆராயும் வல்லவர்கள் உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/133&oldid=812373" இலிருந்து மீள்விக்கப்பட்டது