பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை. இஃது உரைநடை நூலாக இருந்திருப்பின் ஒருவாறு அதனை வேறு எந்த அடிப்படை உணர் வையும் பொருட்படுத்தாமல், செய்திருப்பேன். பாடல் நூல் ஆனதால், அந்தக் காலத்துப் பிஞ்சுணர்வின் வெளிப் பாட்டில் கைவைத்து, அதனை முற்றிமுதிரப் பிசைந்து கனியாக்குவது, சரியென்று எனக்குப் படவில்லை. அஃது என் குழந்தைப் பருவத்துக் கற்பனைக் கனவின் வடிவத்தைச் சிதைப்பதாகவே எனக்குப் பட்டது. முற்றி முதிராத என் தளர் நடைப் பருவத்தில், என்மேல் மொய்த்திருந்த தாறு மாருன தமிழ் வடிவங்களின் .ெ சப் படம் பெருத மழலைச் சொற்களை அறிவுணர்வால், திருத்தமுறச் செய்வது. என் இயற்கையான படிநிலை வளர்ச்சி வெளிப்பாட்டைக் கு லே ப் ப து- எவ்வகையானும் எனக்குச் சரியாகப் படவில்லை. தத்துப்பித்தென நான் பே சிய கொச்சைக் கதம்ப மொழியின் நடையைக் கொண்டும், சொற் குச்சிகளைக் கொண்டும், இளமையில் கட்டிய ஒர் அரிய பாவியக் கூட்டை, வளர்ந்து முதிர்ந்த பருவத் தில், என் கைக்கு வரப்பெற்ற கொள்கை வாளால் வெட்டிச் சிதைப்பதை, என் இயற்கை உள் ள ம் வரவேற்க வில்லை. அறிவு வளர்ச்சிக்கேற்ப என் உள்ளத்துமொழி முதிர்ந்து சிறந்ததை, என் குழந்தைப் பருவத்துக் குதலைச்சொற்கள்தாமே கட்டி யங்கூறி. அளவு காட்டி உணர்த்துவிக்க முடியும். என் இளமைப் பருவத்தில் எடுத்த புகைப்படத்தில், இக்கால் வளர்ந்துள்ள என் வடிவத்தில் வந் து