பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 74 ஒழுங்கை அழித்ததே ! உலுத்தர் சிற்சிலர் முழங்கிய அறிவொடு மாற்ருர் கொள்கையை உரமிட் டுயர்த்தினர் ! ஊராள் வோரும் திறமற் றிருந்ததால், திருந்துவ தின்றி மக்கள் மாறினர் ; மங்கையர் எல்லாம் பக்கத் துணையின்றிப் பழகவும் அஞ்சினர் ! இவனைப் பேன்ற கயவர் மலிந்தார் ! § {} நாட்டு நலத்தை நாடுவர் போல்நம் நாட்டுமுன்னேற்றம் நசுக்கி வந்தனர் ! செல்வர் போர்த்திய செல்வப் போர்வையில் கள்வர் திரிந்தார் ! கற்பைக் கொட்டி, தம்நலம் தேடிய தமக்கையோர் சிலரைப் பனதலம் மறைத்தது : பாதி உடலை மூடி மறைத்திட முழத்துணி யின்றி வாடினர் பலபேர் : வாழ்க்கைக் குறுதுணை ஏதுமில் லார்க்கே இருந்ததோ உடல்தான் ! போது மலரின் புதுமணம் போல 70 அழகும் இளமையும் அவர்களின் சொத்து ! பழகா மக்கள் பழகினர், அவற்ருல் இளகா உளத்தவர் இரங்கினர் ! அவற்ருல் வாணிகஞ் செய்ய வைத்த முதல்போல் துணிகர் மேனியைத் தொகையாய் வைத்தனர் ! வந்த இலாபத்தில் வாழ்ந்தது குடும்பம் ! இந்தத் துறையில் இறங்கா தவர்கள் வண்டி யிழுத்தனர் ; வாட்டும் வெயிலில் விண்டொடு மாளிகை வேண்டிய எழுப்பி, - மற்றவர் வாழ மண்டியிட் டார்கள் ! so இற்றை நாளில் எழுந்த ஆலையில் பணிசெய் வோரெலாம் பாவையர் தாமே! துணிவொடு நிற்குந் தோகையர் வாழ்வைக்