பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 75 — கயவன் இவன் போல் கொடுமை உளத்தவர், நயந்து நாடி நல்லவர் போலப் பேசிக் கற்பைப் பிடுங்கினர்; அவரால் வேசியாய்ப் போனவர் வேண்டிய பேர்கள்! இறந்தவர் பலபேர் : இழிந்தவர் பலபேர் 1 சிறந்த தமிழ்நாட்டைச் செம்மை யாக்குதற் கின்ன நெஞ்சுகள் இடிந்திட வேண்டும் ! § {} பின்னைக் கொள்கைகள் பரவிடும் எளிதில்!” என்று முடிக்குமுன் எழுந்தொரு புலவர் * நன்று கூறினே! ஆயினும் நாட்டுக் கருத்தைப் பற்றிக் கேட்டணம் இல்லை! அறிக !’ என்ருர், அதற்குச் சிங்கன், " நாட்டில் தானே நாமுளோம்” என்று கேட்டணன்; மற்றவர் கிளத்தினர் மறித்து 'உண்மைதான் ; நாட்டில் உலவிடும் நிலையின் தன்மைதான் ஒழுக்கந் தவறற் குறுதுணை !” என்றே ஒப்பினர்; சிங்கனும் இயம்புவான்; 星á母 'நானும் வள்ளியும் நன்றே பிசைந்த தேனும் தினையும்! அத் தெரிவையும் நானும் கடந்த இரவில் களவழிப் பேசிய இடத்தை அடைந்தனர். இவர்கள் பலவாய்த் துடுக்கொடு பேசித் தோகை மயிலினைப் பிடிக்க முயன்றனர்! இருவரும் என்னைத் தாக்கிட நானும் தாக்கினேன்; இத்தீயன் போக்கிய கைவாள் கண்ணையன் உயிரைக் குடித்தது! இதுவே கொலை வரலாறென எடுத்துக் கூறிஞன்..! - 110 கருப்பன் எழுந்து பேனை எள்ளெனப் பிதற்று கின்முன் வள்ளியை இவனே வழிக்கொண் டேகிடக்