பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 76 — கண்ணையன் என்னிடம் காட்டினன்! நானும் பெண்ணைத் தடுத்திப் பேயனை விரட்டச் சென்று நிற்கையில் செருக்கன் இவனே, கொன்ருன் அவனை! கொலைவாள் இடுப்பில் இருந்தது! நானே இருகண்க ளாலும் . கண்டேன்” என்று கூறிய போது திண்டோள் படைத்தவர் இருவர் வந்தனர்! மன்றத் தமர்ந்த மதிதகும் ஒருவர்பால் I 20 ' கண்ணையன் முதுகைக் குடைந்த வாளிதோ' என்ருெரு கைவாள் எடுத்துக் கொடுத்திட மன்றத் தவர்கள் மலைத்துப் பார்த்தனர் ! * சிங்கன்” என்று செதுக்கிய கைப்பிடி அங்கிருந் தவர்களின் அறிவைக் கிளறிடக், கூட்டத் தமைதி குலைந்தது! சிலபேர், வாட்ட முற்ற வகையொடு நின்ருர் ! இதுகால் சிறுவன் ஒருவன் சீட்டொன் றேந்தி அறிவுக் குழுவின அணுகி யாரோ ፱ 30 தரச்சொன் ெைரனத் தந்தான்! அந்தச் சுருளே வாங்கிச் சுற்றி யிருந்த ஐவர் தமக்கறி வித்தார் ஒருவர்! அதனுட் கண்டதே அடியில் வருவது! மோசறு கல்வியின் மானப் பெரியீர்! மாசில் லாத மனத்தவன் சிங்கன் ! கண்ணையன் தன்னைக் கருப்பன் கொன்றதை இன்னும் ஒருநாள் இருந்திடில் விளக்குவன் சிங்கன விடுதலை செய்க வழக்கினை நாளை நடத்துக!............... ........ ...............நலம் விழைந்திடுவோன்” 麗4總 ஒலைச் சுருளில் உணர்த்திய கருத்தை