பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 16 அன்று தந்தவன் அணிமுத் தத்தை இன்று வந்தெனை ஏந்தித் தருவனுே ! உள்ளம் விளைந்த உவகை, காட்டின் வெள்ளத் தைப்போல் விரைந்திட வள்ளி சிங்கனை நினைத்த சிந்தை தன்னோடு திங்கள் முகத்தில் தேர்ந்த மஞ்சளை அரைத்துப் பூசி அகிற்றுாள் கலந்த . விரைத்துள் தன்னுல் வேய்த்தோள் கழுவிப் பொன்னிறப் பசலை மின்னிய வாறு, தன்னுடல் குளித்துத் தாழ்குழல் தன்னை, வாரி முடித்து வகைசெய் தன்று கொடியில் அசைந்த கொத்து முல்லையைப் 芷 படிய வைத்தே பெரியவர் தன்னை அணுகினள், அவரோ அழகுச் சிலையை உற்று நோக்கி உளமகிழ்த் தவராய், "கனுக்கால் தீண்டிய குழலும் நெருங்கி துணங்கிய இடையும், நுதலும் கொண்ட உன்தாய் உருவை உன்றன் சாயல் உணர்த்து கின்றதே ஓவியப் பெண்ணே! கொடியில் தொங்கும் கொழுமலர் தாங்காது, படிவது போலப் படிந்த இடையில், இந்நாள் ஒளிந்த எழில்வெளிப் பட்டதும் 26 புன்னை மரத்தில் புழங்குங் குருகின் தாழை மூக்கின் துணிகர் புருவம் வாழைப் பூப்போல் வதங்கி பிராது, காதள வோடிக் களிப்புற் றிருப்பதும்