பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 79 — தெள்ளிய நீரில் திரியுங் கெண்டைபோல் ஒள்ளரி நெடுங்கண் ஒளியுற் றிருப்பதும், நீரின் மையினல் நெடுங்கொடிக் கோவைச் சீரிதழ் சுருங்கிச் செழுமை குன்றல்போல் இதுநாள் கண்ட இறங்கிய செவ்விதழ் மதுசிந் தாத மரைமலர் துணிஎழில் பவளச் செம்மை படிந்தொளிர் வதுபோல் தவழ்நகை பூண்டு திகழ்ந்திருப் பதுவும், பின்னிய விரலில் பிணந்த உள்ளத்து எண்ணம் மின்னலும், இருந்தவா றிராமல் இரையொடு வருமென் றெவ்வி நோக்கிடும் குருவிக் குஞ்சாய்க் குறட்டை நோக்கலும், "குடுகுடு வென்றே கொல்லைக் கோடி, நெடுவழி நோக்கி நீஎதிர் பார்த்தலும், ஆகிய புதுச்செயல் அத்துணை என்னே ? ஏகிய அவன்வழி ஏந்திய பெண்ணே! என்று பலவா றியம்பிய கிழவர் மீசை மறைத்த மென்வாய் விரித்தே ஆசை வெள்ளம் அவர்கண் வழிவர, மென்ருேள் குலுங்கி மிகுவாய் நகைத்திடத் தென்றல் புரட்டிய மென்றுகில் சீர்செய் தியம்பினள் இன்னே; என்னருந் தாத்தா! வாரா தவர்சென்று வருவார் என்றே ஆரு நெஞ்சோ டலைபவள் இல்லை! சென்றவர் என்றன் சிந்தையில் உளரே! குன்றங் காணில் குவிதோள் கண்டும், வானங் காணில் விரிமார் புணர்ந்தும், தண்புனல் தொட்டவன் தளிருடல் உணர்ந்தும், செந்தேன் தன்னில் தினமாப் பிசையின் சந்தனக் கைகளின் முயக்கினை யியைந்தும், 3 ff 40 50