பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 80 — வருவேன் அறிந்திட வல்லிரோ? வென்றே அடுக்கிய முல்லையின் அரும்புப் பற்களைக் காட்டி மகிழ்ந்தனள், கிழவரும் மகிழ்ந்து, ஒட்டினேம் காற்பொழு’ தென்றே யுரைத்து "வள்ளி, அவன்வரும் வழியினைப் பார்த்தால், கிள்ளும் வயிற்றின் கிளர்பசி படங்குமோ? 60 ஒருகால் உன்பசி ஒடுங்கினும் ஒடுங்கும்! எரியா யுறுத்திடு மென்வயி றென்று, கட்டிய பூக்களைக் கையில் வாங்கித் தட்டுங் கால்களைத் தடுத்து நிறுத்திடும், கோலினை யெடுத்துக் கொண்டவர் அந்தச் சேலினைப் பழிக்கும் விழியினை விளித்து, 'விரைவில் திரும்புவேன்; வேலையை முடித்திடு: கறையில் மனத்தவன் கண்டனை யாயின், நிறுத்தி வைத்திடு, நீ"எனக் கூறிச் சென்ருர்; சென்றிடச் சேல்விழி, ஒடி, 70 நின்றே ஒருமுறை நெடுவழி நோக்கி 'அன்று தந்தவள் அணிமுத் தத்தை இன்று வந்தெனை ஏந்தித் தருவனே! அன்று வந்தவன் அணைத்திட அன்னவன் குன்றுத் தோளில் கொடியாய்ப் பின்னிய என்கை யின்றவன் எயிற்ருேள் தழுவுமோ? என்றுதல் நீவிய அன்னவன் கைகள் பொன்னுடல் நீவிப் பிணையுமோ வின்றே? நெஞ்சே உரைத்திடு நெஞ்சே உரையெனக் கொஞ்சிய வாருய்க் கோதை பாடினள்: . 8() கொல்லையில் கூவிய குயிலின் உள்ளத் தவன்றன் உருவம் திகழ்ந்ததே!