பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 17 பொருள்கண்டு மறங்கண்டு போற்றும் பொன்ேைட இருள்கண்டு மருள்வோரை எற்றுக்குப் பெற்றெடுத்தாய் ? திகழ்ந்த அழகொடு தெரிவை விளங்கிப் புகுந்து நெஞ்சினைப் புணர்ந்தவன் வரவைக் கோணல் அரசியற் கொடுமை யாளரை தானல் களைவது போல்களைந் தகற்றி நாட்டு மக்களின் நலங்காத் தன்னவர் மாட்டுத் தம்முயிர் மாய்த்திட வெண்ணும் உயர்ந்த கொள்கை உடையவர் அரசினை, அயர்ந்த மக்கள் அடைந்திட ஏங்கும், ஏக்கம் அந்த ஏந்திழை உள்ளத் தாக்க முற்றதே! அன்னவன் வரவை, i to நோக்கிய நுண்ணிடை, நோவதும் பின்னவன், தேக்கிய அறிவைத் தேர்ந்து மகிழ்வதும், - வானில் சூழ்ந்த வன்முகில் பரிதியைச் சிலநொடி மறைத்துச் சின்னிழல் தேக்கியும், பின்னர் விடுப்பதும் போன்றிருந் ததுவே! முன்னர் இசைத்த மொய்குழல் மீண்டும் இசைத்தாள் ஒரிசை! . பழக்குலை அங்கும் பைங்கிளி இங்கும் குழலிசை அங்கும் கொள்செவி இங்கும்; விரிகனை அங்கும் விடாய்ப்பெண் இங்கும், 20 சொரிதேன் அங்கும் சுவைப்பவ ளிங்கும்; பொறிவண் டங்கும் பொதிமலர் இங்கும்; உறித்தயிர் அங்கும் உண்பவள் இங்கும்; காட்சிகள் அங்கும் கட்பொறி இங்கும்; பாற்சோ றங்கும் பசித்தவ ளிங்கும்;