பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 83 – அகல்நெடுங் கண்கள் அகன்ற வாருய்ப் "புகலுக நீயார் ?’ என்றனள் வள்ளி ! "வள்ளி நீதானே ? வயங்கொளி வான வெள்ளி நிலாவே விளம்புக! வென்ருள்! ஆம் ஆம்! நானே அன்னவள்! நீயார்? ஆம்பி இடையே அறிவித் திடுவென 'மருக்கொழுந் தென்பெயர்; மங்கையுன் நெஞ்சில் உருக்கொண் டானின் உறவினள்: சிங்கன் அண்டை வீட்டவள்! அன்னவன் பலமுறை & 9 கெண்டை விழியுன் கீர்த்தியை எல்லாம், சொல்லக் கேட்டென் செவியும் மனமும், கொள்ளை மகிழ்வால் குதித்திட மகிழ்வேன். நேற்றை யிரவில் நிகழ்ந்த கொடுமையைச் காற்றினன் என்பால்; சாம்பல் நிறத்த கருப்பன் என்னும் களிமகன் செய்த வெறுப்புச் செயலும் வெங்கொடு நெஞ்சும் கேட்டு வருந்தினேன்; கெடுதலை அடைவான்! கோட்டுக் குயிலே! கொண்ட வருத்தம், விடுக!' என்று விளம்பினள்! - 70 விளம்பக் 'குடுகுடு வென்றே கோதை ஒடிப், பாயை விரித்துப் பரிவோ டமர்கெனச் சொல்லிட, அந்தச் சுரிகுழல் அமர்ந்து, சொல்லிட லானுள்; "சுரைக்கொடி படர்ந்த ஒலைக் குடிலில் ஒதுங்கிய குடும்பம்! வேலைக் கென்று வெளியிற் போவதும் கண்ணிர் சொரிந்து கைபிசைந்து வருவதும், உண்ணிர் இன்றி உடல்நோ யுறுவதும் அந்தக் குடிலில் அடைந்தவர் நிலைமை!’ எந்தக் கதையை இயம்பிடு கின்றீர்!’ 5莎 என்று மறித்தாள் இடையில் வள்ளி!