பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றிய என் மீசையையும் தாடியையும் எப்படிப் பதித்துவிட முடியும் ? எனவே, பாவியம், செய்யுள் என்னும் வடிவிற்கு ஒவ்வாத முறையில் அமைந்திருந்த சில பிதுக்கல் களையும், செதுக்கல்களையும், வெட்டியும் ஒட்டியும் மட்டும், திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தன. ஆணுல், சொற்களே, அவை மரபுநிலைக்குப் பொருந் தாத வகையில் கையாளப் பெற்றிருப்பினும், நான் அடையாளங் கண்ட வடசொற்களாக விருப்பினும், அவை, அற்றைக்கால என் அறிவு வளர்ச்சியைப் புலப்படுத்தும் அடையாளங்களாகவே இருக்கட்டும் என்ற அளவில்-என் இளமைக்கால உள்ளுணர்வின் முற்றி முதிராப் பாடல் வடிவங்கள் இவை என, இன்ருே, பிறகோ, என்னை ஆய்கின்றவர்களுக்கு உணர்த்தட்டும் என்ற வகையில் அப்படியே விட்டு விட்டேன். இவ்வகையில், பாவேந்தரிடம் பழகிய நாட்களில், ஒருமுறை நான் அவரிடம் வினவிய வினவும், அதற்குப் பெற்ற விடையும் ஒரு கரணியம் என்பதால், அதனேயும் இங்குக் குறிப்பிடுவது இன்றி யமையாத தாகின்றது. கொய்யாக்கனியை நான் போட்டிக்கு அணி யப்படுத்த முற்பட்டதற்கு முன்னே ஒருநாள், பாவேந் தரின் தொடக்கக் கால நூல்களில், வரைதுறை யின்றி வடசொற்கள் பயின்றிருந்த நிலையினை அவர்க்குக் கொள்கையுணர்வுடன் சுட்டிக்காட்டி, "ஐயா, இந்நிக்ல, இப்பொழுதுள்ள நம் கொள்கைக்கு மாருனதாக விருக்கின்றதே தாங்கள் இசைவளிப் பீர்களாயின், இவ் வடசொற்களைக் களைந்து விட்டு,