பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 85– பெண்டிர் தேவைப் பட்டதே! அந்த எலும்பெனப் படுத்த இருங்குழல் தன்னிடம் நலம்புனை நங்கை நவின்றனள் இம்மொழி:'அக்கா! உன்றன் அருமைத் தங்கை,நான் எக்கா லும் உன் இன்னலம் நாடுவேன், ஆர்ந்த தினையின் அறுவடைத் தொழிற்கு நானும் ஏகுவன்! நற்றினே கொணர்ந்து கூனும் வயிற்றின் கொல்பசி போக்கி வாடிய கொடியுடல் வளர வைப் பேனெனக் கூறிய சொல்லைக் கோதை ஒப்பிட, | 20 ஏறிய நினைவொடும், ஏரு நடையொடும், செல்லும் அவளொடு சேர்ந்தாள் ஒருத்தி! கொல்லும் விழியும், கோணல் கொண்டையும், பூண்ட அந்தப் பொற்ருெடி இவளிடம் ‘ஏண்டி! தினக்கென ஏகுதல் வேண்டாம்! இன்றைப் பொழுதை இதல்ை கழித்தால், பின்றைப் பொழுதில் பிழைப்ப தெங்ங்ன் ? அங்கொரு வீட்டிற் கோராள் வேண்டும், தங்கக் குணத்தைத் தாங்கிய வர்கள்! காலே எழுந்து குறட்டைப் பெருக்கி, - 130 வேலை முடித்திட வேண்டும்! அதற்குத் தக்க வாருெரு தெரிவை தேவை! அக்கம் பக்கத் தலைந்து கொண்ர்கென, என்னிடம் கூறினர்; இடிந்த வாழ்வில் கன்னி, யுழல்வதேன்! கழறுக ஒப்புதல்! என்று கூறிய இன்மொழிக் கொப்பிச், சென்ருள் அவளொடு; . . . சிறியோள் அவளோ, கொண்டு சேர்த்ததோர் கொழுமனைக் குள்ளே உண்ட கள்ளின் ஒழுகு வாயொடு நின்றிருந் தானே நெடுவான் கருப்பன்: 140