பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 87 — என்று கூறிட, இடிந்த நெஞ்சொடு, வள்ளி கூறுவாள்; வன்மனம் கொண்ட கருப்பன் தன்னைக் கொன்று குவித்திட மருப்புத் தோள்புனை மறவன் எவனும் உண்டோ இல்லையோ ஊரினில் ?’ என்றிடத் 'திண்டோள் பலவுள! தீயவன் தன்னை ஒழித்துக் கட்டிட உறுமுவோர் தம்மை அழித்திடு கின்ருன்; ஆலம் விழுதுபோல் தொங்கிய உயிர்களின் தொகைபல வாகும்! பொங்கும் புனலுட் போனவர் கணக்கிலர்; I 80 ஊரின் மன்றமும் உலுத்தன் கொடுமையைத் தேர்ந்ததே! எனினும் தெளிவா யவனெனக் காட்டும் ஒருவரைக் காண ததனுல் வாட்ட மடைந்தது! மற்றவன் தன்மேல் பழியார் சொல்லினும் பறிப்பான் அவருயிர்! வழியார் வகுப்பார்! வஞ்சித் தேயவன் கொழுப்பை யடக்கிடக் கொதிப்பார் எல்லாம் சலிப்புறுகின்ருர்! சாதிப் பவர்யார் ? என்று கூறி; ஏந்திழாய்! நேற்று மன்றம் நடத்திய மாண்ட கண்ணேயன் 190 வழக்கை யறிவையோ? வென்றிட, வள்ளி வழக்கா, யார்மேல்? வஞ்சகன் தன்னைக் கொன்ற கொடியனைக் கண்டுகொண் டாரா? நன்று நன்றென நவிலவே, வள்ளி! கருப்பன் சிங்கனைக் காட்டிக் கொடுத்தான்!” என்று மருக்கொழுந் தியம்பினள்; ‘என்ன சிங்களு கொன்றவர்.. ? சிறுமதி யாளன் என்கண் தனக்கோ இழைத்தனன் கொடுமை ! ஐயகோ! கொடுமை யகற்றி என்னுயிர் *