பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 88 — உய்ய உழைத்திட ஒருவரு மிலரே! 20 0 கொண்டுவா, என்று கூறிடில் உடலைத் துண்டுசெய் தீயும் தோள்மறவர் நாடே! கட்டிவா வென்று கழறிடில் தலையை வெட்டி வருகின்ற வீரமலி நாடே! கோழையா யினையோ கோழையா யினையோ! வாழைக் குருத்தொடிந்து வீழ்ந்தாலும் தாங்காத சூம்பற்ருேள் பெற்ற மக்களையேன் பெற்றெடுத்தாய்? தாம்பெற்ற பிள்ளை தானைக்கு முன்சென்று செத்தொழிந்து மாண்டுவிடின் சினைத்த அவள்வயிற்றுக் குத்தல் மாயுமெனக் கொள்ளும் வீரமுள்ள 2 I {} பெண்டிரைப் பெற்றெடுத்த பெருநாடே மாய்ந்தாயோ? செண்டு மலர்பட்டுச் சிதைந்து நொறுங்கிடும் தோளைப் படைத்தவரைத் தோற்றுவித் தனையோ! காளைக் கொம்பலைத்த காளை யொருவற்கே ஆரப் பூமாலே அணிந்தனை வாரென்ற வீரப் பெண்டிரெலாம் வீணுகப் போனரோ? பொருள்கண்டு, மறங்கண்டு, போற்றும் பொன்னடே! இருள்கண்டு, மருள்வோரை எற்றுக்குப் பெற்றெடுத் (தாய்? பெண்ணைக் காத்துவரும் பேர்பெற்ற நாடே,உன் முன்னைப் புகழெங்கே? முன்கை வா ளெங்கே? 220 ‘ஐயகோ’! இந்நாட் டொழுங்கை யார்வந்தே உய்விக்கப் போகின்ருர்! உறங்குந் தமிழ்நாடே!’ என்று பலவா றியம்பிப் புலம்பிட, - நின்ற மருக்கொழுந்து ஏன்வள்ளி: இவ்வா றழுது புலம்பிடின் ஆகுவ தாகுமோ? உழுது பலங்காணு வொருவன் நிலந்தன்னைப் பழுதா மென்றியம்பல் போலப் பிதற்றுகின்ருய்!