பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 18 ஒப்பதும் மிக்கதும் ஒருங்கின் றியதாய்த் தொன்மை அடையினும் தேய்வடை யாது மென்மை ஒலிமிக விரவிய தமிழே. வாழுதி நன்றே! மறைந்த பின்போய் மறைந்தது சிலநொடி! விரைந்த நினைவொடு வந்தனன் சிங்கன்! குடிவில் அமைதி குடிகொண் டிருந்ததே! அடிமே லடிவைத் தங்கனும் இங்கணும் நடந்தான் ஒருவரின் நாட்டமும் அற்றிட இடந்தான் வேருே என்று மயங்கி கொல்லேயின் மல்லிகை குவிந்து கிடந்ததும், முல்லையின் மணமவன் மூக்குள் நுழைந்ததும், அறிந்து தேறி, அவ்விட மென்றே தெரிந்து தெளிந்தவன் தீய்க்கும் வெய்யிலில் 1 0 கொழுவிய நிழலைக் கொட்டிய கொல்லையைத் தழுவிய மலர்க்கொடி தண்ணிழல் அடைந்தான்! வெந்த நெஞ்சுக்கு வேண்டிய மகிழ்வைத் தந்து மகிழ்வூட்டும் தமிழ்நூற் றிறம்போல் இருந்தது அந்நிழல் எழலாம் என்றே இருந்த எண்ணமும் இறந்தது! தென்றல் அளித்த, மகிழ்வால் அயர்ந்த உள்ளமும் களேத்த உடலும் களிப்பால் நிறைந்தன! இந்நிலைக் கிடையில் எழுந்த தொருவினு ஊற்றும் புனலின் உட்புகுந் தெழுந்து 20 நாற்றம் நிறைமலர் நல்லிதழ் சிவந்து மல்லிகை முல்லை மருவி, மணமதை