பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 92 – என்றே கொண்ட மகிழ்வொடு கொடுங்கண் மூடி, அயர்ந்தனன்; சிலநொடி அகன்ற பின்னர்ப் பெரியவர் வந்து பேதைப் பெண்ணுே அறிவி யாமல் அகன்றனள் எங்கோ ? எங்கே போயினள்?, எனநினைந் தவராய் அங்கவன் துயின்ற அழகினைக் கண்டே உள்ளத் தேயோர் உணர்வு பொங்கிட "வள்ளி தனக்கு வாய்த்தவன் இவனே!" வெனமயங் கியவராய் விதிர்ப்புற வெழுப்பத் 6 {} துயின்ற சிங்கன் துயிலா நினைவை அயின்ற இருங்கொடி அணிக்கைப் பட்டதாய்த் துள்ளிக் குதித்தவன் தளிர்க்கொடிப் பெயரை, "வள்ளி என்றே வாய் தரக் கிழவர் நெஞ்சு மகிழ்ந்த நெறிகாட் டாதே 'அஞ்சல் தம்பி! அவள்யார் ? என்ருர்! வந்த தென்றற்கு வணங்கிய நாணலாய் நின்ற சிங்கன் நாணினுன் ! கிழவர் 'தம்பி நானுன்னைத் தெரிந்திருக் கின்றேன்! கொம்பில் தொங்கிய கொழுங்கனி கவர்ந்த 7 0. கள்ளன் நீயா ? கழறுக வென்றிடக் 'கள்ளன் நானிலை' என்றவன் தொடர்ந்து, மற்றவர்க் காயின. ஒருபொருள் கவர்ந்து நிற்றல் தவறு ! நெடும்புனல் வையத் தெங்கெனும் ஏற்புடை இருபா லவரும் தங்களுள் கலத்தல் தகாதென் றறைபவர் அறிவில் லாதவர் ! அழகோ டழகும் அறிவோ டறிவும் அணுகில் இன்பம் !” என்று பலவா றியம்பிடக் கிழவர், - 'நன்றெனக் கூறி நகைத்துத் தம்பீ. 80 உன்னுள் ரேதென் றுரை'யெனத் தன்னுரர் வரிப்புறம் என்றே இயம்பினன்!