பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مسم %) Sيم سسس அவற்றிற்குப் பகரமாகப் பொருத்தமான தூயதமிழ்ச் சொற்களே, நான் பெய்துவிட முடியுமே செய்யட் டுமா? என்று கேட்டேன். அவ் வினுவைச் சற்றும் எதிர்பாராத பாவேந்தர், உடனே, "இல்லை; வேண் டாம்! அவை அப்படியே இருந்து விட்டுப் போகட் டும்! நான் எப்படியெப்படி இரு ந் து வளர்ந்து, இப்படிப்பட்ட நிலக்கு வந்திருக்கின்றேன், என்று மற்றவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டாமா ?” என்ருர். அவருடைய விடை எனக்கு மிகவும் சரி யாக, இயற்கையை யொட்டியதாகப் பட்டது. இந்த வகையில், தனித்தமிழ் முயற்சிக்கு ஓர் உந்துகருவியாக விருந்த மறைத்திரு. மறைமலையடி களனர் அவர்கள், தம் முற்கால நூல்களைப் பிற்கால் அச்சிடுவிக்கையில், அவற்றிருந்த வடசொற்களே யெல்லாந் தவிர்த்துத் துயதமிழ்ச் சொற்களாக்கி வெளியிட்ட, பெருந்தகைமையையும் பீடுறு கொள் கைச் செயலேயும், நான் நினையாமலோ மதியாமலோ இல்லை. அவர்தம் தமிழ் முனைப்பிற்கு என் ஆதரவும் ஒப்புதலும் பாராட்டுதலும் உண்டு. எனினும் அடிக ளார் செய்த, உரைநடைத் திருத்தம் வேறு; நம்மின் செய்யுள் திருத்தம் வேறு. உரைநடை என்பது நாம் கட்டும் வீடு போன் றது. அதில் செயற்கையின் அறிவாட்சி மிகுதி. எனவே முன்னர்க் கட்டிய வீட்டை இக்கால் புதுப்பிக் கும் வகையில், நாம் இடித்துக் கட்டலாம்; நில மாற்றலாம்; புதுப்பகுதியைச் சேர்க்கலாம்; பழம் பகுதியை நீக்கலாம்: ஆளுல் பாநடை என்பது, பறவைகள் கட்டும் கூடு போன்றது. அதில் இயற்கை