பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 94 -


நெட்டிய வறுமை யோடு
நேர்ந்ததோர் பஞ்சம்! ஐயா
மட்டிலாத் துன்பம் மீற
மாய்த்தனர் மக்கள் எல்லாம் ! 4


மழையில்லை; பயிர்க ளெல்லாம்,
மடிந்தன; மரங்கள் தோறும்
தழையில்லை; ஏரி காய்ந்து,
வெடித்தது; தண்ணீர் ஓடும்
புழையெல்லாம் தூர்ந்து போகப்
புதுப்புனல் தன்னைக் கண்டு,
பழம் நிலை எய்தும், நாளைப்
பார்த்தனர் பழனர் எல்லாம்! 5