பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 19 வெஞ்சுரம் விளைத்த வேர்க்கிழங் கெடுத்துப் பிஞ்சுப் புளியொடு பிதக்கி யுண்டனர்! எல்லா வுயிர்களும் ஏறிய பஞ்சத் தில்லாக் கொடுமைக ளேற்றன; நன்ருய்ப் பேணல் மறந்த பெதும்பரைத் துறந்து கோணற் கொம்பினைக் கொண்ட ஆடுகள் கானல் நோக்கிக் கடுகி யேமாந்து, கூனல் நடையொடு கொள்விடாய் கொல்ல. வற்றிய கள்ளியின் வாய்த்த சிறுநிழல் பற்றுவ அவற்றைப் பார்த்த குட்டிகள், புனல் காணுது புன்முலை யுண்ணற்கு நுணங்கு காலொடு துள்ளி வரும் வழிச் I (3 சிறுமழை யின்றி வெறுநிலங் கொண்ட பெருவெடிப் புள்ளே சிறுகால் புக்கப் பொடிவா யரற்றும் புன்னிலை ஒருபுறம்! பேச்சடங்கி வாயின் பிதற்றல் அடங்கி, மூச்சடங்கிப் போனவர்க்கு மூட்டியதி நன்றடங்கிச் சாம்பராய்ப் போன சுடுகாடு போற் புனலோ, வற்றிடவும் செங்கதிர் வாட்டிடவும் நின்றமணல் ஒற்றிய காலை யுறுத்திட்ப் பசுங்கன்று இலைநிழல் காணு தலைந்தே யிறுதியில் வளையா வொருபனை வாய்த்த சிறுநிழல் 20 அண்டிடக் காய்ந்தே ஆடிய ஒலைபால் மண்டிய பேரொலி மாய்த்திட வெகுண்டு, 'அம்மா வென்றம் மாவினைத் தேடும்.

  • பொதும்பர்-இடையர்