பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 96 — வெம்மைகொள் காட்சி வேருெரு புறம்மிகும்! மாக்களில் வாருய் மடிந்திட மக்களும் தாக்கிய பசிக்குத் தந்தனர் உயிரை! குழிந்த வயிருெடும் கூனிய முதுகொடும், வழிந்த நீரொடும், வளமில் கண்ணுெடும், குரங்குக் குட்டியாய்க் கவ்விய மக்களைத் துர்க்கிய வாறும், துவண்ட வாறும், 30 தளர்ந்த நடையொடும் தாக்கும் பசியொடும், உலர்ந்த நாவொடும், உறுத்துங் காலொடும் கூட்டங் கூட்டமாய்க் கலைந்து சென்றனர்! வாட்டிய பசிக்கு வளர்ந்து நின்ற நாக தாளிப் பழத்தினை யுண்டு, தாகத் தணித்திடத் தண்புன வின்றிக் கணல்தெறு மாற்றின் கொதிமணல் பன்முழம் கல்லிநீர் கண்ட களிமே லோங்கிட அள்ளிக் குடித்த அகமகிழ் வோடு நிறையும் மக்கள் ஒருபுறம் நிறைய 43 இரையும் புளிமர இலைதின் பாரும், வெஞ்சுரம் விளைத்த வேர்க்கிழங் கெடுத்துப் பிஞ்சுப் புளியொடு பிதக்கியுண் பாரும், குப்பைக் கீரையைக் கொடுங்கனல் மூட்டி வதக்கியுண் பாரும், ஒருபுறம் நிறைய, மாண்டனர் பசியால் மக்கள் ஒருபுறம்! மூண்ட பஞ்சம் மீளா முன்னர்ப் பலபல முறையிற் பணத்தைச் சேர்த்தவர் இலமில மென்றே இரப்பார்க் கெல்லாம், ഉഷ്ണമൃദ്ധ யென்றே பிடித்துக் கூறினர்! 50