பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 97 — விளைவிலை யென்றே விண்ணை நோக்கினர் உழவர்கள் எல்லாம் ஒருமுறை யுண்ணல் பெருமை என்று பேசப் பட்டது! குழவிகள் தம்மைக் கொஞ்சிட மறந்தனர்/ விழையுங் குழுவிகள் வெறுந்தோல் சுவைத்தே அலைவதைக் கண்ட அன்னமா ரெல்லாம் ஆவினந் தந்த அரையுழக் குப்பால் நாவை நனைக்கவும் போதா தாகிட அழுகுரல் கேட்டே அழுதனர் வருந்தி! இல்லார்க் குதவிடு மெண்ணத் துதித்த 6 (; நல்லார் நிறுவிய நல்லறச் சாலைகள் மூடப் பட்டன. மூண்ட வறுமையால் நோயும் பஞ்சமும் நுழைந்தது நாட்டில்! "சாத்திரம் நம்பிய சழக்கர் கடவுளை ஏத்தித், தொழுதனர்; இதல்ை வந்த வரும்படி குருக்களின் வயிற்றுட் புகுந்தது! பெரும்படி யான மக்கள் 'நாத்திகம்’ பேசி வந்ததாற் பஞ்சமேற் பட்டதென் றேசி வந்தனர் ஏய்த்த ஒருசிலர், மழைவரச் செய்ய மாதவஞ் செய்தனர்! 76 சிலைசிலை யான சிறுமக வெல்லாம் பாலுக் கேங்கிய படியா பிறந்திட வேளைக் கறுபது படிப்பால் சாக்கடை நீரிற் கலந்து நெய்யெரி புகுந்ததே!. ஊரின் மக்கள் உறுதி குலைந்தது! பலநாட் சென்றும் பசும்புல் தோன்றும் நிலையிலை என்றே நினைத்த மக்களும், பெற்ருேர் விட்டவர் பிள்ளைகள் விட்டும், சுற்றம் விட்டுஞ் சென்று பிரிந்தனர்!