பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 20 வெங்கண் உலகில் விளையும் தீமையால் பொங்கிய வானம் பொழிந்ததே ஒருநாள் வயல்வெளி காய்ந்த தாலே, வறுமையாற் காய்ந்தோர் எல்லாம் நயந்தொரு வேலை ஏற்க நலிவினை யெடுத்துக் கூறி அயர்வொடு வருந்தி நின்ருர்; அடிப்படை உழவு மாய, துயர்வுற்ருர் அதனைக் கொண்டு தொழில்செயும் மாந்த ரெல்லாம்! அக்காளும் யானு மாக அணுகாத பேர்க ளில்லை; புக்கிலா வீடொன் றில்லை; போய்க்கேளாச் செல்வ ரில்லை: எக்காலத் தும்அப் பஞ்சம் போலிலை, ஐய! நாங்கள் நெக்கிநெஞ் சுருகி நின்ருேம் நிலையிலா வாழ்வு தன்னல்! உறிஞ்சுபால் உறிஞ்சும் மென்வாய்! உடலினைத் தடவும் ஒர்கை ! குறிஞ்சியின் பண்ணைப் பாடிக் குழவியை அயரப் பண்ணும் நறுந்தாய்மை நிலைமா ருத - நங்கையின் உள்ளம் வந்தே உறுத்திடும் அதற்குள் சூழ்ந்த வறுமைவந் ததனே மாய்க்கும்!