பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 100 - ஒருநாளுக் குணவு கிட்டும்! ஒருநாளுக் கதனைப் பாரோம்: பெருநாட்கள் எம்மை வந்து பசியுண்ணும் இவ்வா ருக, ஒருநாளில் வழக்கம் போல உணவிரந் தொருவீட் டண்டை இருவரும் சென்று நின்ருேம்; எதிர்நின்ருன் ஒருவன் வந்து! பெரும்பணக் காரன் போலத் தோன்றினன்: எம்மைக் கண்டு, வரும்புனல் தாவும் மீன்போல், வல்லுறு போலத் தாவி, பெருமகிழ் வெய்து வான்போல் பின்னின்ற தமக்கை தன்னை, அரும்பிய நகையைக் காட்டி, அணுகிப்பின் னிதனைச் சொன்னன்: பைங்கிளிக் குஞ்சு மாய்க்கும், பணியினல் நடுங்கல் போல, நங்கைநீ நடுங்க லேனே? நல்லுடல் இளமை தன்னைத் தங்கிய வறுமை மாய்க்கத் தளர்நடை பூண லேனே? இங்குநீ தங்கி வீட்டின் எழிலினை மேற்பார்’ என்ருன்! தமக்கையென் விருப்பங் கேட்டாள்! தங்காத உயிரைக் காக்க, எமக்கொரு வாய்ப்பென் றெண்ணி இருவரும் ஒப்பி நின்ருேம்! Ç