பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 103 — ஏழையாய்ப் பிறந்தோ ரெல்லாம் இடரின்றி வாழ்தற் கில்லை! ஏழையாய்ப் பிறந்தோர்க் கெல்லாம் இடர்தராச் செல்வ ரில்லை வாழையா யெண்ணி யினும் அருங்கனி பெற்றுப் பின்னைப் பீழைசெய் உலகு செய்யும் பிழையினை யொறுத்தல் யாரோ! 18 அன்னவள் சென்ற பின்னை அவனெனக் கனலாய் நின்ருன் புன்னையின் கிளியி னப்போய்ப் புலந்தொறும் தேடித் தேடி என்னையும் பயனென் றில்லா தென்னுள மிடிந்து, காக்க மன்னிடும் படையில் சேர்ந்து மண்ணுல குய்ய நின்றேன் 19 இருபதி ஞண்டிந் நாட்டின் இராணுவத் துழைத்தே னய்ய! பெருமதிப் பாளர் கூறும் பேரறி வேற்று மக்கள் கருமதி போக்க வெண்ணுங் கழகமோ டமர்ந்து வாழ, ஒருமதி கொண்டிவ் ஆர்வந் தொருதிங் ளான தென்ருன்! 20 ().