பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யின் உணர்வாட்சி மிகுதி. எனவே, ஒரு பறவை யின் கூட்டை, நமக்கேற்ற வகையில் சிதைப்பதும், மாற்றிப் புதுவது புனைவதும், அந்தப் பறவையின் இயற்கை யுணர்வைச் சிதைப்பதைப் போன்றது. உணர்வால் கட்டிய கற்பனை மாளிகையை, அறிவால் திருத்திப் புனேவு செய்வது, மேகத்துக்கு நிறந்தீட்டு வது போன்றதும், மலேக்கு வடிவமைப்பது போன்ற தும், பட்டுப்பூச்சிச் சிறகுக்கு ஒரம் வெட்டுவது போன்றதுமான மனம் பொருந்தாச் செய்கையே யாகும். அறிவுணர்வு மிகக் கலந்த பாடல்கள் அற நூலாகி விடும்! கற்பனையுணர்வு மிகக் கலந்த பாடல் களே பாவியங்கள்! எனவே, அன்று வெளிப்படுத் திய உணர்வு முளைகளை, அப்படியே மக்க ட் கு வடிவப் படுத்திக் காட்டினேன். அவற்றுள் பற்பல வடசொற்கள் களையப் பெறவில்லை. உணர்வு மாருத, இயற்கையழகு கெடாத-வகையில் ஆங்காங்கே சில வடசொற்கள்-அறியாப் பருவத்து அறிவுணர்வு. ம ழு க் க ச் சொல்லாட்சிகள் - முதலியன உண்டு. அவற்றை அப்படியே விட்டு விட்டேன். பாட்டமைப் பில் கூட அதிகம் கைவைக்க வில்லை. ஒலியமைதி கருதி ஓரிரு சீர், தளைகள் செப்பம் செய்யப் பெற்றன. இனி, இவ்வாறு திருத்தப் பெற்ற படி, பாவேந் தரின் முன் பார்வைக்கு வைக்கப் பெற்றது. பாவேந் தருக்கு அன்றிருந்த வினையழுத்தத்தில், இன்று, நாளையென்ருகி, ஒருநாள் மாலை 6 மணியளவில், கொய்யாக்கனி படிப்பதற்கு எடுத்துக் கொள்ளப் பெற்றது, பாவேந்தர் முழங்கையை மிசையின்