பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 105 — உளங்குளி ரெய்த உரைசெய் தமக்கையின் துளங்கும் வாழ்வின் சுடரெங் கேயோ? வளங்கவிழ்ந் தேற்ற வறுமை நொறுக்கிய விளங்கொளி வாழ்வின் வித்தெங் கேயோ? உரை செய் வீரே! உரைசெய் வீரே! கரையிற் கடும்புன லலையென வுள்ளம் உரைசெய் முன்னம் உலைதலை நிறுத்த உரைசெய் வீரே! உரைசெய் வீரே! (வேறு) கேட்டவன் தன்னை நோக்கிக் கூறுவார்; தம்பி! நம்மை வாட்டிய பஞ்சம் நீங்க வந்தது மழையும் அந்நாள் கூட்டமாய்க் கூடி ஆற்றில் குதித்தெழு வெள்ளம் கான வேட்டனர் உழவர்; எல்லாம் . விரைந்தனர்; விரைந்தேன் யானும்! புதுப்புனல் விரைவில் யாரோ புரண்டனர் என்று கண்டு குதித்தனன் ஒருவன்! பின்னைக் கொண்டுவந் தானே, ஐயோ, நொதித்த வோர்பிணத்தை ஓடி நோக்கிட இடிந்து போனேன்! பதித்தொரு படிவம் போலென் பைங்கிளி கிடந்த தய்யோ! அன்னவள் நிலையைக் கண்டுன் அன்னையும் சின்னுள் சென்றே அன்னவள் பின்ன டந்தாள்! அழகொளிர் மகவை யேந்தி