பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 107 — 'யாவையி னுக்கும் யான்போய் அழகொளிப் பாவையள் தன்னைப் பார்த்துமீள் கின்றேன்; பூவையள் தன்னைப் பேணிய வாறு காவல் செய்தலென் கடமையன் ருே'வென்(று) 14 அன்னவ னுரைக்க அருஞ்சுமை நீங்கித் தன்னுரி மையினைத் தாங்கிய கிழவர் என்ன வாயினும் இயம்புக; இனியவள் உன்னவள், நீயவட் குரியவன்' என்ருர்! 15 இம்மொழி கேட்டவன் எழுந்(து),இரு செவிகளே அம்மொழி பேசியே அணிசெய் பவளே எம்முறை யாகிலும் காணுமென் றேகிட நிம்மதி யோடே பெரியவ ருவந்தார்! 16 .