பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 22 ஒன்ருல் நீயழிந் தொழிந்திட வேண்டும்! அன்ருல் என்னுயிர் அழிந்திட வேண்டும்! உவந்த வுளத்தே உறுங்கொடிக் கோவையின் சிவந்த பழத்தினைச் செவ்விதழ் என்னும் மருக்கொழுந் தோடு, மாக்கொழுந் தெழில்சேர் உருக்கொழுந் துடலின் ஒண்டொடிப் பாவை, பெண்மான் பின்னுெரு பொன்மான் போலாய், பண்பா டிருங்குயில் பழகுந் தனிவழித் தொடர்ந்து சென்ருேர் தொல்குடில் அருகிள்ை! 'படர்ந்த தேமலிற் பட்டொளிப் பாவாய் இக்குடில் தனிலுன் ஏறுளான்; ஏகுக! தேன்போல் வாயே! தேமலர் செல்லுக!” | {} என்றே மருக்கொழுந் தியம்பிட, வள்ளி 'நன்றே! அம்மா! நான்போ வே'னென் றிருத்தி யேகிட, ஏகினள் மருக்கொழுந் தொருபுறம் இந்த ஒருநொடிக் குப்பின் வள்ளி சென்றவ் வருங்குடில் நுழைந்தாள்! காதலை விழைந்த கன்னியுட் சென்றதும் சூதாற் கதவு சாத்தப் பட்டது! மாடப் புறவென மடக்கொடி வெகுண்டே, ஒடப் பார்த்தனள் உள்ளம் இறுகிய வேடன் விரைவது போல்விரைந் தோடிப் 30 பிடித்து நிறுத்தினன் பேயன் ஒருவன்! துடித்த நெஞ்சொடு தோகை நோக்கியே 'அன்றே அணுகிய அறிவில் லாதான்! குன்றின் உளத்தவன்! கொடுங்கருப் பனெனக்