பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— £10 - பெண்மைக் கெதிராய்ப் போயின ளேயோ! தன்னினந் தீய்ந்திடுந் தணல்விற காகிட என்னுளந் துணிந்தனள்? இனிய புறவாய் வந்தவள் இறுதியில் வல்லூ ருகிள்ை! எந்தமிழ் மரபிற் கிழுக்கைத் தேடினள்! நச்சுப் பார்வையில் நங்கையர் கற்பை எச்சிற் படுத்தும் இடக்கன் தன்னிடம் மயற்பட வைத்தவள் மாக்கல் இட்டென் உயிர் நீக் கிடினும் உவந்திறப் பேனே! புலிவாய்ப் படுத்திய புன்மதிப் பாவை! நலிசெய் மாறே நானென் செய்தேன்? 6 (; எறிபுனல் தள்ளினும் இடரொடு மீள்வேன்! பொறிநெருப் படையினும் புண்னெடு மீள்வேன்! மலைநின் றுருட்டினும் உடலொடு மீள்வேன்! சிலையம் பெய்யினும் செருக்கோ டிறப்பேன்! 70 கள்வர்கைப் படினும் கற்போ டுய்வேன்; கொல்வார் கைப்படின் கெடுஞ்செய லேற்பேன்; அல்லா திக்கொடு மரவத் தாட்பட் டில்லா தொருபழி ஏற்றிட என்னுயிர், என்னைக் கொண்டவன் இன்னுயிர் எந்தமிழ் மன்னுந் தன்னுயிர் மணித்தமிழ் நாட்டுயிர் கறைப்படப் பொறியில் கயவனின் பாலெனச் சிறைப்பட வைத்தனள் செயலறி நெஞ்சிலள்' என்று விக்கிய இளமான் தன்னை, & ; நின்று நோக்கிடும் நிணமிகு கொடுவரிப் 80 புலிபோல் ஆகினன் புல்லறி வாளன்! ചാ உயிர்த்தாள்! ஊரறி கள்வன் பின்வரு மாறெழிற் பேச்சைத் தொடுத்தான்; அழகெனுஞ் சொல்லை அமைத்த புலவர்க்