பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 111 — கிலக்காய் நின்றெழில் இயக்கிய உருவே! வானில் தோய்ந்த ஒளிநிலா போன்றென் மேனியில் தோய்த்திடு முழுநிலா முகத்தை! கிளை நின்று நழுவிய கரும்பாம் பன்ன நிலைநின் றவிழ்ந்த நீள்கருங் கூந்தலை அள்ளிச் செருகிய அழகென் நெஞ்சில் § 0 கொள்ளை ஆசையைக் குவித்தது! குளத்தில் எட்டிக் குதித்திடும் இருங்கயல் போலுன் வட்ட முகத்தின் வால்விழி வீசிய வெட்டில் என்னுளம் வீழ்ந்தது! வேனிலே! எழில்மிகும் இதழ் திறந் தின்மொழி பேசுக! அழிவில் இன்பம் ஆக்குக! அதுவிட் டி.ழிசொல் பேசிடில் இன்பம் என்ருற் பழிச்சொல் பேசுக, பனிவாய் திறந்து! தீயென வாரித் தெளித்தால் உன்கை, தோய்த்த சந்தனத் தூறலாய்க் கொள்வேன்! 100 தின்னக் கொடுப்பின் சுண்ணத் துவையலும், இன்னலம் பயக்கும்; எழிற்கை கொண்டு, கள்ளியாற் புடைப்பினும் கடிமலர் என்பேன்! பொல்லா தெனினும் பூவைநீ விரும்பின் நல்லன வாகும்! & நானே இங்ங்ன், தொல்லை தன்னையும் துரும்பாய் எண்ணி, அல்லன வெல்லாம் அன்போ டேற்றே உயிரினப் பொருளா யுன்ன திருந்திடல் ஏனென நினைக்கின், எனக்குன் பாலாய், - ஆன அன்பெல்ாம் அரைநொடிக் குள்ளே, 1 1 0 விளங்கும்! விளங்கிய வேற்களுய்!