பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— Í 12 — உன்பால் களங்கமில் அன்பைக் காட்டுவ தற்கே, இந்நெடு நாட்களாய் எதிர்பார்த் திருந்தேன்! அந்நெடு நாட்களும், ஐயகோ! ஒழிந்தவே! எஞ்சி யுள்ள இனிவரும் நாட்களை வஞ்சி நீயென வரித்திடின் இன்பத்து, வேனிற் காலமாய் விளைத்திட முடியும்! ஏனிவ் விழிநிலை?” என்ருன்; இச்சொலோ, கொடுங்கல் பட்ட கூர்வேல் போன்றும், அடுங்கலத் தரற்றிய அறச்செயல் போன்றும், I 30 வீளுய்ப் போனது; வீணன் பிதற்றிய கோணை மொழிக்கவள் கொள்செவி யின்றி, மேற்பனி மூடிய மாய்க்குங் கடல் தனக் கேற்ப நிகழ்த்திய திக்கொடும் பேச்சென எண்ணி வருந்தினள்; இதற்குள் எத்தன், கன்னியின் அண்டை கடுகினன்; அவளோ, துணுக்கம் எய்தித் துடித்த நெஞ்சாய், பணிவோ டிருகை பணித்தினி மேலே நடந்திடப் போகும் நலிவினை எண்ணிட உள்ளம் இன்றி, உரையெது மின்றி, 130 வெள்ளம் உகுத்து, வளராக் குழவி, வேண்டாம் எனவெறுந் தலையசைப் பதுபோல், நீண்டசைத் தேஅந் நீள்குழல், ஐயா, என்னை ஒருவற் குரிமை யாக்கினேன்; அன்னே தன்னெடும் அவள்பெற் றெடுத்த பெண்கள் தம்மொடும் பிறந்திருப் பீரே! கண்ணுக் கொருவனேக் கருதாது அவர்கள், எத்தனை பேர்கட் கிசைந்தனர்?