பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியீர்! பித்தரைப் போலப் பிதற்றுவார் எல்லாம், பண்டை யொழுங்கினைப் பார்த்திட வேண்டும்! 芷鲁 வண்டை யொத்திடும் வன்மனத் தவரே, பற்பல பெண்டிரைப் புரத்தல் கூடும்! சிற்சில மகளிர் சீரொடு வாழ்வார்! உள்ளத் தெழுந்த உண்மை அன்பினேக் கிள்ளிப் படைத்த கன்னியர் தமக்குப் பகுத்த அன்பு படர்வதே யல்லால், மிகுத்த அன்பு மிளிர்வதே யில்லை! ஒருளத் தன்பை ஒருத்தியின் பாற்பட்ட, ஈருளந் தமக்கே இருகூ ருக்கிடின், அவளுளத் தன்பின் அத்துணைத் தன்மையும், # 50 திகழும் என்பது தெளிவிலாக் கொள்கை! தாமரை யிலைமேல் தங்கிய நீர்போல் நாமிருப் பதிலென் நலத்தைக் காண்போம்!” என்று கூறிய இன்சொல் அறிவிலி தன்கைக் கிடைத்த தகுநூல் போன்றே, என்ன பயனும் இல்லா தொழிந்ததே! என்னருங் கிளியே! இதுபோல் அறிவை, இனிவருங் நாட்களில் எனக்குக் கூறத்தான், நனிவரு வாயென நான்சொல் கின்றேன்! அணுகுக அம்பொன் னணிக்கை நீட்டி I 60 அணைவாய்! அம்மலர் அழகுவாய்த் தேனே, ஊட்டுக! உடலோ டென்னுடல் கூட்டுக! காட்டுக இன்பக் கடலினே! கவினே!" எழிலே இன்பத் தேந்தலே இன்மலர்ப் பொழிலே பூவுடற் புணர்ந்த தென்றலே! சந்தனப் பாவாய்! செந்திரு வெழிலே!