பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 114 – உயிரே உயர்ந்த ஒருதனிப் புலவன், மயர்வற வரைந்த மாவோ பியமே! அருகுக! என்னுடல் அணைக்க அனேக் கென இருகண் மூடி ஏந்திழை எதிர்செல, 7む "ஐயோ! வென்றே அலறித் துடித்தாள்! 'உய்யே ஞே’வென உயிர்விட வெண்ணி, ஒடினள் ஒடி ஓங்கிய ஓரிடத் தேடினள்: தேடித் தன்முன் தானைச் சேலையைக் கழுத்திற் சேர்த்துச் சுருக்கிடும் வேளையில் கருப்பன் விரைந்தக் கொடியினைத் தாங்கித் தடுத்திடத் தளிர்க்கொடி சினந்தே, ஒங்கிய யவன்கன்னத் தறையவும், அவ்வறை வாங்கிய மறுகணம் வயங்கொளிக் கன்னத்தை, ஏந்திச் செருக்கோ டிதழாற் சுவைக்கஅவள், I 80 உதறித் தள்ளி ஒருமருங் கோடி, - பதறித் துடித்திடப் பாய்ந்தனன் அங்கும்! 'அண்டா தேயெனை அடைவேன் என்றுநீ, கண்ட கனவைக் கடிதின் மறந்திடு நெருங்கினை யாயின் நீயழி வாயே! - அருங்கற் புய்த்திட அழிவேன்! அழிவேன்! ஒன்ருல் நீயழிந் தொழிந்திட வேண்டும்! அன்ருல் என்னுயிர் அழிந்திட வேண்டும்; இன்றிவை அல்லால் என்கற் பழிதலும், மன்னி நீயதை வாங்கி மகிழ்தலும், 190 என்றும் நிகழா தென்றும் நிகழாது'! : என்று நிகழ்த்திய ஏறுடைச் சொல்லைக் கேட்டுச் சிரித்தான்! கிளிமொழி பஞ்சிக், கோட்டுக் கூகையே! கூக்குரல் ஏன் என,