பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 1 17 — காலையிற் கூடும் மன்றம் 'கண்ணேயன் வழக்கைக் கூறும்! சேல்விழி மங்கை மாரே,

  • சென்றங்கு வருக! வென்று, நூலறி வாளர் கூற,

நுண்ணிடை யோர்கள் அந்த வாலறி வாளர்ப் போற்றி வணங்கிய வாறு சென்ருர்! செல்வழி மருக்கொ ழுந்தச் சேல்விழி நோக்கி, கண்ணே! கொல்வழி செய்தே னென்று கொண்டனை யோ’வென் ருேத, “வெல்வழி யீதென் ருலும் வேருெரு வழிகா னிரோ! அல்வழி எற்றுக் கென்ன அகல்விழி ஈதைச் சொன்னுள்; 'உரங்கொளும் மகளிர் தம்மை உருக்குலைத் திடுதல் நல்ல திறங்கொளும் ஆண்கட் கென்றும் எளிதிலை! திருவி ளக்கே! அறங்கொளும் நெஞ்சு தன்னை, அழிக்குமே யன்றிக் காத்த, அறங்கெடும் செயலுக் கென்றும் ஆட்படா தென்று ணர்வேன்! உன்னுள வுரமே இந்த உயிர்தரும் வினையை வென்று, மன்னிசை தந்த தென்று மருக்கொழுந் தியம்ப, வள்ளி