பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 120 – எண்ணி வருந்திடும் இடர்.அச் செயல்தமை நண்ணிடும் இடர்போல் நானூறு பங்காம்! அவலம் விடுகெ’ன அவளைத் தேற்றினள், பவளம் பழிக்கும் பனியிதழ்! பின்னை இருவரும் அமர்ந்தனர்! ஏதோ நினைத்து, வருகின் றே'னென வள்ளி எழுந்து, 30 கொல்லைக் கோடிக் கொழுமலர் மல்லிகை, முல்லைக் கொடிகளில் மொய்விழி மொய்த்து மீண்டனள்! அதற்குள் மீண்டார் கிழவர்! மூண்ட மகிழ்வொடு கிழவர் பாலாய் ஓடிச் சென்றவள் என்னுயிர்த் தாத்தா, வாடினன் உங்களின் வருகை காணுது என்றனள்! அவரும் என்னருங் கிளியே! சென்ற தெங்கெனச் செப்பாது சென்றன! உன்றன் துணிவை உரைக்க வொல்லுமோ!' என்ற வாறங் கெழுந்து நின்ற, 40 மருக்கொழுந் தாளை மருள நோக்கி இச் சுருட்குழல் யாரெனச் சொல்வாய்' என்ருர்! 'அறிவால் அகன்றஇவ் வம்மை தன்னையும், விரிவாய் நடந்த வேறுள செய்தியும், அறிவிக் கின்றேன்; அணிக்கால் தூய்மை. புரிந்து வருக! போயமர்ந் திடுவோம்’ என்றே அவள்தண் ணிரெடுத் தீய 'நன்றே என்றவர் நலமுடித் தவராய்ச் சென்று திண்ணையைச் சேர்ந்தார்; - வள்ளியும் . கொன்றை நிறமருக் கொழுந்தும் அவர்முன் 50 அமர்ந்தனர்; அவரோ, அம்மா உன்னுளம் படர்ந்த வருத்தம் பாய்ந்தது முகத்தில்! இடர்ப்பல பட்டிருப் பாய்’ என எண்ணுகின்