பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 121 - றேன் என மருக்கொழுந் தின்பாற் சொன்னர்! ஆம்' எனு மாறவள் அசைத்தனள் தலையை! இதன்மேல் அந்த ஏந்திழை பழங்கதை அனைத்துங் கூறி, ஐய, என்குடும்பம், அழிந்த பின்னர்யான் என்கற் பதனைப் பிழிந்த கருப்பன் கால்களைப் பிடித்துக் கெஞ்சிப் புரண்டு கிளையழிந் தவட்குக் శ్రీ{} கஞ்சியும் கட்ட க் கால்முழத் துணியும் தந்து வாழ்வினைத் தருகெனக் கேட்கச் சிந்தை திரும்பினன். சின்னுட் குள்ளே, ஊரிற் சிலருக் குரைத்தென் மனத்தை, நேரில் முடித்தேன்! நானும் அவரோ(டு) ஒப்ப நின்றவர் உரைத்திடு முன்னர் எப்பணி யாயினும் இயற்றியும் அவர் பால் அடங்கிக் கிடந்தும், அவர்செயுஞ் செயல்கட்(கு) இடர்செய் யாமலும் இருந்தேன்; சின்னுள் கழிந்ததும் என்பால் கருத்தை யிழந்து, 7 J பழித்தனர்! என்னைப் பார்க்கவும் ஒவ்வாது, தனித்தொரு குடிலில் தங்கிடச் செய்து, தனித்தவர் வாழ்ந்தார்: - - தளிர்க்கொடிப் பெண்கள் ஒவ்வொ ரிரவையும் உயர்ந்த இரவாக்க எவ்வொரு நினைவும் இழந்தவ ராகி, என்னை மறந்தார்! ஏதோ நேற்றுத் தன்னை மறந்து தனியவள் வாழுங் - என்குடி லடைந்தே என்னுடன் மகிழ்ந்து பின் அன்போ டென்ன அணுகி, வள்ளியின் எழில்நல முரைத்தும் இதல்ை வந்த 80 பழியைக் கூறியும் பண்ணிய கொலையையும் எடுத்துக் கூறினர் எக்களிப் போடு!