பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 122 — கெடுத்திடப் போகும் கொடுமனம் தன்னை நன்ரு யுணர்ந்தேன்! நல்லவர் நடத்திய மன்றச் செய்தியும் முறையோ டறிந்தேன்! நீதியை மயக்கிய நிலையில் நான் போய்ப் பீதியைக் கிளப்பினேன்! பின்னர் நடந்ததை; வள்ளி கூறுவ ளென்றிட: வார்குழல் துள்ளிய வுணர்வோடு தொடர்ந்து, மருக்கொழுந் திட்டுச் சென்றதும் இழிமனத் தவன்பால்; 9 (3 விட்டுச் சென்றதும், வீணன் அவள் கற் பழிக்கமுற் பட்டதும்; அக்கொடுஞ் செயலே ஒழித்திட மன்றம் ஒடி வந்ததும், தன்பால் இயம்பிய தருக்குச் சொற்களை வந்தவர் கேட்கும் வகையைச் செய்ததும், இதல்ை கருப்பனை இட்டவர் சென்றதும், சிதறிய நீதி ஒன்ருய்ச் சேர்ந்ததும், எடுத்துச் சொன்னாள்! கிழவர் ஏதும் தடுத்துக் கேளாத் தன்மையில் இறும்பூ தெய்திய வாருய், எனையறி யாமல் | 0 0 எய்திய இடுக்கண் இவையோ என்றே அசைவற் றிருந்தார்! அக்கால் சிங்கன் பசையற் றிருந்த பாழ்நிலம் பாயும் நீர்போல் விரைந்தான்! நீள்கண் வள்ளி சோர்விடை இன்பஞ் செறிவது போலாய் மலைத்தோள் கண்டே மலைத்தாள் உள்ளம் இளேத்தவட் கந்நொடி ஏற்றம் பெற்றது! பெரியவர் அறியார் போல்நடித் தார்.அவள் உரியவன் வந்த உவப்பை அடக்கி1 .