பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 123 — எழுந்து நின்றனள்; இவள்தன் குெடுமருக் 110 கொழுந்தும் நின்ருள்: கோதை கிழவர்க் குனர்த்தும் வகையில் ஒருநொடி தாழ்த்தி, புணர்ந்த நெஞ்சினைப் பார்த்தக முவந்து, “தாத்தா! இவர்தான்...” என்று தயங்கிடப் பூத்தது வியர்வை, பொற்ருெடி முகத்தில்! "யாரம் மாயிவன்? யாங்கிவன் வந்தான்? கூரம் பேபோல் கொல்விழி நங்கையர் தனித்துள இவ்விடம் தருக்கன் வந்ததேன்? பிணித்திடு வீரிப் பெருமரந் தனிலென்று முதியவர் நடித்த முறையைச் சிங்கனும் 120 அதிவிரை வாயறிந் தேதும் அறியான் போலிருந் தவனைப் பூவை கண்டு வேலருஞ் சொற்களால் விதிர்ப்புறு வானென எண்ணி நடுங்கினள்! இவனே மருக்கொழுந் தன்றே மன்றில் அறிந்துளாள். அதனல் "வள்ளியும் சிங்கனும் வைத்த காதலை எள்ளள வாகிலும் இவரறி யாரோ? "என்ன நடக்குமோ என்றி.டர்ப் பட்டாள்! புன்னகை பூத்துப் பொலியும் முகத்தைக் கண்ணிர் வந்து கருக வைத்தது! . 130 வள்ளியின் வாட்டாம் வளர்ந்திடக் கிழவர் உள்ளம் மகிழ்ந்தார்; எனினும் உரம்விடா திருந்தவர் பால்ாய் இருங்குழற் கோதை அருந்திறல் மறமும் அறிவுங் கொண்ட பெருந்திறல் நெஞ்சின் பேரர சாகி, என்னை ஆண்டிட விருக்கும் இவர்தான் முன்னேக் கூறிய மூதறி வாளர் தாத்தா இவரே தாமச் சிங்கன்! பூத்து விளங்கிய பேரறி வாள'ரென்