பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கங் - பாவேந்தரின் பழநியம்மா அச்சகத்திற்குச் சென் றேன். அக்கால் மன்னர் மன்னன் என்னிடம், "நீங்கள் தலையிடம் (பாவேந்தரை நாங்கள் தலை’ யென்று சுருக்கமாக அழைத்துக் கொள்வோம்.) ஏதாவது, கொய்யாக்கணிக்கு மதிப்புரை கேட்டிர் களா ? என்ருர். நான் இல்லையே, நான் ஏன் மதிப்புரை கேட்பேன் ? என்றேன். அவர் என்னைக் கேட்டதிலிருந்து, பாவேத்தர் அதற்கு நான் கேளாம லேயே மதிப்புரை ஒன்று எழுதிக் கொடுத்திருப் பார் என்று உய்த்துணர்ந்து கொண்டு மன்னர் மன்னனிடம் அவ்வாறு பிலுக்கினேன். அதற்கு அவர், நீங்கள் கொடுத்து வைத்தவர்தாமய்யா! (அவர் பயன்படுத்திய சொல் அதிர்ஷ்டக்காரர் என்பது.) அருமையான மதிப்புரை ஒன்று எழுதிக் கொடுத்திருக்கிருர், நான் அறிந்த வரையில் அவர் இப்படி யாருக்குமே எழு தி க் கொடுத்ததில்லை; அவனவன் மதிப்புரை வேண்டுமென்று கேட்டுத் தவங்கிடப்பான். இறுதியில் வேண்டா வெறுப்பாக, கிண்டலாகவோ, ஏனேதானே வென்ருே எழுதிக் கொடுப்பார். இறுதியில் அதையும் வாங்கிக்கொண்டு போவார்கள். நீங்கள் கேளாமலேயே உங்களுக்கு மிகவும் சிறப்பாக எழுதிக் கொடுத்து விட்டாரே; வியப்புதான் (அவர் பயன்படுத்திய சொல் ஆச்சரி யந்தான்’ என்பது.) என்று கூறி மதிப்புரை எழுதியிருந்த தாளே எ ன் னி - ம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்தவுடன், பாவேந்தர் என் மேல் கொண்டிருந்த கள்ளமற்ற மெய்யன்பையும், மதிப்பையும் அறிந்து உள்ளம் உருகி நின்றேன். என் கடைவிழிகளில் நன்றிக் கண்ணிர் துளிர்த்தது.