பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 125 — அன்னை அற்றவள் தன்னை ‘அழாதே’ எனமருக் கொழுந்தழு தாளே! நெகிழா துள்ள நெறியமை முதியவர், மகிழா நின்ற மறைவெளிக் காட்டா 'தென்னினும் பெரிதோ இவனிடத் துன்னுயிர் பின்னிய வன்பே, பேசுக! வென்னக் ‘கடவுள் என்ருேர் கற்பனை யிடத்துப் படர்ந்த அன்பினும் பல்வகைப் பெரிதே' உயிரோ டுளமும் ஒருபாற் பட்டுக் குயிலிய உருவும் கொள்ளும் என்னின், ஒப்பில் லாதாய் ஊறிடுங் காதல், f 8 íj எப்பொருள் தன்னிலும் ஏற்ற தாகுமே! என்னுயிர் காக்கின் ஈருயிர் காப்பீர்! மன்னுக என்றும் மாணப் பெரியீர்! அன்பைப் பேணுக! அன்பைப் பேணுக! என்பை நெகிழ்க்கும் அன்பைப் பேணுக!” -என்று கதறி யிருங்கொடி சாய்ந்திட நின்று தாங்கினன் நெடுந்தோட் சிங்கன். பொலபொல வென்றே பெரியவர் கண்களில் நீர்த்துளி நிரம்பிட, நெடுங்கண் மருக்கொழுந் - தெழுந்தோர் புறமாய் ஏகினள் சிங்கன் 190 கொழுந்துடல் தூக்கிக் கிடத்தினன் தன்மடி! - நீர்கொணர்ந் தெழில்மரை நிகர்க்கும் முகத்தில் சீர்செய அன்னவள் சிறுவிழி திறந்து சிங்கன் தன்முகம் நோக்கிச் சிரித்தனள்! பொங்கு தாமரைப் பூவே! எழு’கெனக் கிழவர் மொழிந்தார்! கிளியுட னெழுந்து மழவன் தன்னெடும் மயங்கி நின்றிட அம்மா! உன்னரும் அணிகா தலனே என்றன் மகனென” இறுத்திட, வள்ளி, திருடிக் கொணர்ந்த தேறல் தன்வீட்டுப் .300 பொருளாய்ப் போன போக்காய் உவந்தே, ---