பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 126 — ஏறுபோலவன் எங்கிருந் தோமிக ஊறு செய்திட ஒருநாள் வந்தான்! வேறு யாருமன் றன்னவன், அன்றென மீறிப் போனவன் தானடி தோழியே!” என்றே மெல்லென இன்குர விசைத்தாள்! சென்றவள் இடையினைச் சேர்ந்தனன்; உடனே கன்னத் தறையக் கைவிரைந் தோடப் - பின்னுக் கிழுத்தென் பொன்னத் தானிதைக் கேட்டீரோ வென்ருள்; கேளா தவன்பால் 2 : 0 வாட்டிப் போன வன்கதை கூறவும், சிங்கனும் அந்தச் சேயிழைக் குறவெனத் தயங்கி கதையைத் தானுரைத் திட்டபின் பொங்கிய மகிழ்வொடு புத்துற வாகிய திங்கள் முகத்துத் தெரிவை கொல்லைக்கு எழுந்து நடந்திட இவனும் செல,மருக் கொழுந்துங் கிழவரும் கொஞ்சுங் கிளிகளைக் கண்டு மகிழ்ந்தனர்! கடிமலர்க் கோதை அன்று பூத்ததோர் அழகிய முல்லையைப் பறித்து முகர்ந்த குறியைப் பார்த்தவன், 230 மறித்து நின்ற மலர்க்கொடி நீக்கி, எட்டித் தெரிவையின் இடையைத் தொட்டுக் "கட்டிக் கரும்பே கன்னம் காட்’டெனக் காட்டுவாள் போலவள் கன்னம் காட்டிட, நீட்டுவான் போலவன் தன்னிதழ் நீட்டிட, ‘வெடுக் கென வேற்கண் பின்னுக் கோடியே அடுக்கிய முல்லேயின் அழகைக் காட்டினள். துடுக்குப் பெண்ணே! தொலைவில் நின்றென உறவு காட்டினே! உன்னுற வானபின் பிரிந்து செல்லுவ தேனெனப் பிணைகவே! 23 0. என்றவன் கூறிட ஏந்திழை பாடினள்! -