பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—- 127 — (வேறு) மாலைப் பொழுதிருக்க மஞ்சள் வெயில் சூழ்ந்திருக்கத் தோளைப் பிடிப்ப தென்னவோ!-ஒளி வேளை மறப்ப தென்ன வோ? தோழி யுடனிருக்கத் தொல்லை வந்து காத்திருக்க, நாழி பொறுக்கு திலேயோ?-ஒளி ஆழி மறைவ திலேயே! திறந்த வெளியிருக்கத் தந்தையும் நம் மோடிருக்க பறந்து வருவ தென்னவோ?-நிலை மறந்த வகைதா னென்னவோ? மாலை யொழிந்துவிடும்: மற்றுமிருள் போர்த்துவிடும்; காலை மலரும் வரையே-இரு - கைக்குள் அடக்க மல்லவோ? பாடல் முடிந்ததும் பைங்கிளி அவன்கை ஓடி விழுந்திட, ஒளிமுகத் திதழைப் பதித்தவன் இரவு படர்ந்திடப் போகும் இன்பியற் கெடுத்துக் காட்டாம் இதுவென நவின்று நகைத்தான்; நங்கையும் அவனும் இன்ன வாறாங்கே ரிருந்திடப் பொன்னிறப் பரிதியும் போந்தது மேற்கே! (Q) حضر خص حسكه حسيك .