பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 25 கற்றவர் தாமும் கல்லார் போலவே உற்ற பிறப்பிற் கடிபணிந் துழல்வர்! மேற்கு வானத்து மிளிர்ந்த செம்மையை ஏற்கும் கன்னத் தெழில்மருக் கொழுந்தின் உள்ளத் தேயில் வுலகைக் கவ்விய வெள்ளத் திருளும் விரைந்து படிந்திட, எதையோ வெண்ணி ஏங்கிய வாருய் வதைசெய் நெஞ்சின் வாட்டம் ஏற்றுக் குலையா வெழில்புனை கலைஞன் வடித்த சிலையாய் ஒருபுறத் தோங்கிய சிந்தனை அவளே அமுக்கிட அமர்ந்திருந் தனளே! கவலை உந்துங் காரணம் என்னென்(று) 19 அறிந்திட வள்ளி அவளை அணுகி "செறிந்த தமிழ்நாட்டுச் சீரெலாம் மாய்ந்த வகைபோல் உற்ற வாட்டம் ஏதெனப் 'புகையும் நெஞ்சின் புன்புகை வந்துன் துளிர்த்த மகிழ்வைத் தொலைத்திட நாளுெறேன்! கண்ணின் பாவையே கண்ணிர் வார்த்துக் காத்த காதலுக் கானவர் தம்மொடு பூத்த மகிழ்வில் புதையா தென்னுளம், எரிந்த சாம்பலை ஏனெனக் கிளறின் பொறிந்த தீவெளிப் புறப்படும் போ'என்று 20 நீர்வடித் தியம்பி நின்றிட, மாண்டவென் சீர்வடித் தீந்தன; சிறியோள் நானுனக் காற்றுவ தெவ்வள வாகிலும் ஈடிலை! மாற்றுக நின்மிடி; மனத்தின் உறுத்தலை, என்பா லுணர்த்துக வென்றெழ வைத்துத்,