பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—- 129 – தன்தோள் சார்த்தித் தன்குடில் சென்ருள்! கொள்ளைப் போலும் கொளுத்திய விளக்கின்முன் பள்ளிப் பிள்ளைகள் பரவினர் போல . மருக்கொழுந் தோடு,அம் மங்கையும் அமர்ந்தாள்! பெருக்கிய துன்பத்துப் பிணைந்த சிங்கனும் 30 முன்னுல் அமர்ந்தான்; முதுகினைச் சாய்த்துப் பின்னல் உள்ள பிடிச்சுவர் அடியில் பெரியவர் அமர்ந்தார்; பேசினுள் வள்ளி: 'உரிய காரணம் ஒன்றும் இன்றி, வருந்துவ தெங்கள் வாட்டம் போக்குமோ? அருந்திய உணவும் அற்றது எனும்படி உன்றன் வருத்தம் ஏதென உணர்த்துக" -என்றே வினவுக இவளிடம் அத்தான்’’. என்று மொழிந்தாள்: ஏற்று, அவன் கூறின்ை: 'அன்பை வாழ்வின் அணியெனக் கொண்டு 40 துன்பம் எய்திய ஞான்றும் துவளாது வெற்றி கண்டனை, அம்மா! வெந்திடும், பெற்றி யாயஉன் பெருமிடி தன்னை எம்பால் உரையா வருத்தம் என்னெனக் கேட்டான்; இச்சொல் கிள்ளையைத் தேற்றிட வாட்டம் உற்ற வகையினைக் கூறுவாள்; ‘அண்ணு' என்னுளத் தமைந்த தெல்லாம், பெண்ணுய்ப் பிறந்த பெருமிடி யொன்றே! நலிந்த வாழ்வில் நசித்திடு வோர்கள், வலிந்த மக்களால் வாழ்விழக் கின்ருர்: 50 ஆணுய்ப் பிறந்தவர் ஏழையர் ஆகில் வீளுய்ப் போவதை விடவே றில்லை! மக்களுள் மாக்களாய் மாண்டிட வேண்டும்!