பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 130 — தக்க திறமையும் தன்னறி வும்மிகப் பெற்றவர் கூடப் பிறப்பினில் தாழ்ந்தால் உற்ற இழிவுக் கொருமுடி வின்றிச் செல்வரைத் தாங்கிச் சிறுபுழு வாகி, *ஞொள்குதல் தவிர உய்வொன் றில்லை! பெண்கள் ஏழையாய்ப் பிறந்திடில் அவர்படும் புன்மிடி தன்னைப் புகலவும் வேண்டுமோ? 6 9 கற்றவர் தாமும் கல்லார் போலவே, உற்ற பிறப்பிற் கடிபணிந் துழல்வர்! இப்பெருங் கொடுமை ஏற்றம் பெற்றஇம் முப்பே ாரசர் முரசொலி நாட்டில், தாழ்பிறப் பெய்தித் தளர்வாழ் வேற்ற சேல்விழி மாதர் சிறத்தல் எங்ங்ண்? கருமைச் சாதிக் கிடையிற் பிறந்தேன்; வறுமை நீரில் வளர்ந்தேன்; வளர்ந்து மலர்ந்த நிலையில் மதமிகு யானையின் உலர்ந்த நாவிற் குண்னிர் ஆனேன்! 70 என்னைப் பிணைத்த எங்கள் குடும்பம், புன்னைப் பல்லியின் பொடிமுட் டைபோல் சிதறிச் சிதைந்தது. சீரிழந் தென்னே அழியாது விட்டதே அன்னவன் மனமும்! ஏலா நிலையிலும் என்போ லொருத்தி, வாழும் குலக்கொடி வள்ளியின் வாழ்விற் சூழ்ந்த துயரைச் சுட்டெரித் தேனே! ஆயினும், . . . . ஒன்றென் உளத்தை உறுத்திடு கின்றதே ! அன்றென் வாழ்விற் காவன செய்தவர் 80 தீய வுளத்தவர் ஆயினும் திகழ்ந்து,

  • ஞொள்குதல்-குலைதல்