பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 131 – வாய்ந்த மனேவியாய் வந்தபின் அவரை அன்பொடு பேணி, அடக்கம் பணிவெனும் பண்பொடு பழகிப் பயன்துய்ப் போமெனும் எண்ணம் என்னுளத் திருந்த வகையில்ை நன்னிலம் ஆக்க நாளும் உழைக்கும் உழவன் போலவர் ஊறுளம் களைத்துப், பழமை திருத்திப் பயன்கண் டுள்ளம் மகிழ லாமெனும் மாமனங் கொண்டேன்! கண்ணேயன் தன்னைக் கொலைசெய் தவராய்ப் 9 @ பெண்ணே வருத்திய பிழைசெய் தவராய், நானே அவரை நாட்டிட முயன்றேன்! வீணே வாழ்வை வெட்டி வீழ்த்தினேன்! என்பயன் கண்டேன்! இனியென் வாழ்வு புன்பயன் காணும் பெற்றியி னல்லது, வேறென் காணும்? வேறென் காணும்? யாரென் வாழ்வை எடுத்து நிறுத்துவார்?" -என்று வருந்தித் துடித்தனள், வீங்கிய குன்று தோளனைக் குழைந்து நோக்கிய வள்ளியின் முகத்தில் வாட்டம் தெரிந்ததே! # 00 அள்ளிய வருத்தத் தலைந்தவன் கூறுவான்: செம்மா துளமெனச் சிவந்த கண்ணுடை அம்மா இதுகேள்! அன்போ டறனும் பூண்டிவ் வுலகைப் புதுக்கின. ரெல்லாம் நீண்டொரு புகழை நாட்டின தல்லால் கண்ட பயனிலை காரிகை உன்போல் கொண்ட தவற்றைக் கொண்கன் புரியினும் ஒறுத்த ஒண்டொடி ஒருவரு மிலரே! அன்ன புகழுக் கானநின் னுள்ளம் - இன்னணம் வருந்துதல் என்ன பற்றியோ? I 10