பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

اسسس مع تي سسس. பாவேந்தர் கொய்யாக்கனிக்குக் கொடுத்த மதிப்புரையைப் பற்றி இரண்டொரு சொற்கள் சொல்லியாகல் வேண்டும். நூலைப் பற்றிய செய்தி கொஞ்சந்தான் அதில் வருகிறது. மற்ற செய்தி யெல்லாம் என்னைப் பற்றியதுதான். என்னை அவர் விங்ளகிக் கொண்ட தன்மை அவ்வரிகளில் ஆழப் பதிந்திருந்தது. வெறும் சொற்களாக அவற்றைப் பாவேந்தர் பயன்படுத்தி விடவில்லை. அதில் அவர் பயன்படுத்திய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு; உணர்வுண்டு! அ தி லு ள் ள அத்தனைச் சொற்களிலும் அவரின் தூயதமிழுள்ளம்கனிவு நிரம்பிய குழந்தையுள்ளம்-பொருமையற்ற சான்ருண்மையின் பெருந்தகையுள்ளம்-பதிந்து, மெய்ம்மை சாற்றி நின்றது. அதில் அ வ ரின் சிரிப்பு துள்ளியது; நகைச்சுவை பொதுளி நின்றது; உவகை ஊஞ்சலாடியது; அன்பு குமிழியிட்டது; அறிவு சுடர் வீசியது; என்பால் அவர் வைத்த நம்பிக்கையின் ஈரம் கசிந்து நின்றது! அதில் என் தமிழ் உள்ளத்தையும், அதில் கொப்பளிக்கும் உ ண் ைம உணர்வையும் அ த ன் சூட்டையும் குளிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்; என் அறிவின் வலிந்த கொள்கையைச் சுட்டியிருந்தார்; அவரொடு நான் பழகிய பண்பு வழுவாத தொடர்பை உறுதிப் படுத்தியிருந்தார்; எல்லாவற்றுக்கும். மேலாக என் எதிர்காலத்தையே வாழ்த்தி நிலப் படுத்தியிருந்தார் மொத்தத்தில் அவர் அம் மதிப் புரையில் பயன்படுத்திய சொற்களில், அவரின் பாடல் உள்ளம் கொழுமை கொண்டது. வண்ண. மாலைகள், சுடர்க் கற்றைகளே வீசி, ஒரு பாவலனின்