பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 133 — நின்று தேற்றிய நெடுங்குழல் வள்ளி, ‘அறிவுப் புலவர்க் காவன கூறி 1 40 அறிவித் திடுங்கள் அத்தான்; வாழ்வில் தவறிப் போவரைத் தண்டித் தலினும் அவரறி யாத அறிவுரை கூறிச் செம்மைப் படுத்தலே சீராம்; இங்கிவள் தன்னைக் கருப்பன் தன்னே டினத்துச் செம்மை வாழ்வுக் காவன செய்தல் எத்துணைச் சிறப்பை பீந்திடும்! ஈருயிர் செத்தழி வதினும் செழித்தல் சிறப்பாம்! கல்லி யெடுத்துக் கள்ளியை அகற்றி, முல்லை ஊன்றின் முளையாதோ வென்ருள்! 4 50 இதுவரை இவர்களுக் கிடையில் நுழையாத முதியவர் பேச்சை முடித்த வகையில் 'பித்தற் குரைக்கும் பேரறிவு கல்லில் வித்து விளக்கும் வீண்செயல் ஆகும்! யாவற் றிற்கும் நாளை யடைந்திடும் முடிவைக் கண்டு முனைவது நன்று! படியா உள்ளம் படிந்த தாயின் அதற்கும் வாழ்வாம்’ என்ருர். அதன்பின் அனைவரும் படுக்கை யேகினரே!