பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 26 அவர்மாண் டிடினும் அணியிழை வாழேன் அவர்மீண் டிடினும் அவரொடு வாழேன்! படுத்த பின்னரும் பாவையின் நெஞ்சுபுண் படுத்திடத் துயிலாது படுத்திருந் தனளே! தந்தையும் மகனும் திண்ணையை ஆண்டனர். சிந்தை வருந்துவள் சிந்தை யயர்ந்த அந்தையல் தன்னே டயரா திருந்தனள், எங்கும் அமைதி ஏற்றமுற் றிருந்தது: கங்குல் விலகிய கவின்நிலா வான, அழகு செய்ததே அகன்ற கண்ணுே(டு) இழவு வீட்டெரி விளக்கா யிருந்தாள், மருக்கொழுந் தங்கே! மனமோ துன்பம் I (? நெருக்கிட நைந்தது; . “நாளை வழங்கும் தீர்ப்பென் வாழ்வைத் தீய்ப்பதா யிருந்தால் ஏற்பதென் னுள்ளம் இறப்பை முடிவாய்' என்று பலவா றெண்ணி இடிந்தே ஒன்றும் முடிவிலா துறக்கம் ஒழிந்தனள். "நாளே கருப்பனை நன்னெறித் திருப்பி மீளுதல் வேண்டினும் மக்கள் ஒவ்வார்: அவர்தம் பிழையை ஒப்புதல் நடவா(து) அவர்ஒப் பிடினும் அவரை விடுத்திட - மக்கள் ஒவ்வார்; மக்களும் ஒப்பித் 2 () தக்க என் வாழ்வைத் தருவ ராயினும் என்னே டினியவர் இருக்க ஏற்பரோ?